பனாமா பேப்பர்ஸ் வழக்கு: நடிகை ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத்துறை விசாரணை
சம்மனை ஏற்று மும்பை அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ஐஸ்வர்யா ராய் இன்று ஆஜரானார்.
புதுடெல்லி,
பனாமா பேப்பர்ஸ் வழக்கில் நேரில் ஆஜராகக் கோரி நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ஏற்று மும்பை அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ஐஸ்வர்யா ராய் இன்று ஆஜரானார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 2 முறை அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் 2 முறையும் அவர் தனக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில், இன்று டெல்லி ஜாம்நகர் இல்லத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஐஸ்வர்யா ராய் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.