மிசோரம் மாநிலத்தில் நிலநடுக்கம்; ரிக்டர் 4.2 ஆக பதிவு

மிசோரம் மாநிலத்தில் இன்று நள்ளிரவு ஒரு மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2021-12-16 21:57 GMT
எய்சால்,

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த மாநிலத்தின் சம்பாய் மாவட்டத்தில் இருந்து 56 கி.மீ. தென் கிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி இருக்கிறது. நள்ளிரவில் நில அதிர்வு ஏற்பட்டதால், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான சேதங்கள் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் செய்திகள்