டெல்லியில் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி; மொத்த எண்ணிக்கை 10 ஆக உயர்வு
டெல்லியில் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியான நிலையில் மொத்த எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்து உள்ளது.
புதுடெல்லி,
தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது 60 நாடுகளுக்கு பரவி உள்ளது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளதால் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்தியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு நுழைந்தது.
இந்த நிலையில், டெல்லியில் 8 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த சூழலில், இன்று 2 பேருக்கு தொற்று உறுதியானது. இதனை, டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாநிலத்தில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
அவர்களில், ஒருவர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்ற 9 பேர் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ளதாகவும், தற்போது, 38 கொரோனா நோயாளிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மந்திரி சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். 100 ஒமைக்ரான் பாதிப்புக்கான படுக்கைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.