பிபின் ராவத் - மனைவி அஸ்தி கங்கை நதியில் கரைப்பு
மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் - மனைவி அஸ்தியை மகள்கள் கங்கை நதியில் கரைத்தனர்.
டேராடூன்,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரது உடல்கள், 17 பீரங்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் டெல்லி பிரார் சதுக்கத்தில் உள்ள தகன மேடையில் நேற்று தகனம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, தகனம் செய்யப்பட்ட பிபின் ராவத் மற்றும் மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் அஸ்தி அவர்களின் மகள்கள் கிருத்திகா மற்றும் தாரணியிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத்தின் அஸ்தியை அவரது குடும்பத்தினர் தங்கள் சொந்த மாநிலமான உத்தரகாண்ட் கொண்டு சென்றனர். அம்மாநிலத்தின் ஹரித்வார் கொண்டு செல்லப்பட்ட இருவரின் அஸ்தி இன்று கங்கை நதியில் கரைக்கப்பட்டது.
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் - மனைவி மதுலிகா ராவத் அஸ்தியை அவர்களது மகள்கள் கிருத்திகா மற்றும் தாரணி இருவரும் இணைந்து கங்கை நதியில் கரைத்தனர்.