மனித உரிமை மீறல்களுக்கு மேற்குவங்காளம் உதாரணம் - கவர்னர் சாடல்
மனித உரிமை மீறல்களுக்கு மேற்குவங்காளம் உதாரணம் என்று அம்மாநில கவர்னர் ஜக்தீப் தங்கர் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
மனித உரிமைகள் தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேற்குவங்காள கவர்னர் ஜக்தீப் தங்கர் ‘மனித உரிமைகள் தினம்’ தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய கவன்ரர் தங்கர், ஜனநாயக அமைப்பை செழுமைபடுத்த மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவது அவசியம். மனித உரிமை மீறல்களுக்கு மேற்குவங்காளம் சிறந்த உதாரணம். இது குறித்து மக்கள் வெளிப்படையாக பேசக்கூட அச்சப்படுகின்றனர்’ என்றார்.
மேற்குவங்காளத்தில் கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது.
இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பாஜக ஆதரவாளர்கள் மீது வன்முறை தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், கொலை, பாலியல் வன்கொடுமை உள்பட பல்வேறு குற்றங்கள் நடைபெற்றன. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.