குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் மன்மோகன்சிங் பங்கேற்காமல் இருக்க அனுமதி
உடல்நலக்குறைவு காரணமாக குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் தன்னால் பங்கேற்க இயலாது என்று மன்மோகன்சிங் கூறியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
புதுடெல்லி,
மாநிலங்களவை உறுப்பினராக உள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், கடந்த அக்டோபர் மாதம் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்தநிலையில், அவரிடம் இருந்து ஒரு கடிதம் வந்துள்ளதாக மாநிலங்களவையில் அதன் தலைவர் வெங்கையா நாயுடு நேற்று அறிவித்தார். அதில், உடல்நலக்குறைவு காரணமாக குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் தன்னால் பங்கேற்க இயலாது என்று மன்மோகன்சிங் கூறியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்காமல் இருக்க மன்மோகன்சிங்குக்கு அனுமதி அளிக்கலாமா என்று வெங்கையா நாயுடு கேட்டார். அதற்கு உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதையடுத்து, அவைக்கு வராமல் இருக்க மன்மோகன்சிங்குக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவெங்கையா நாயுடு அறிவித்தார்.