நாளை நடைபெறும் 'ஆசாதி75-புதிய நகர்புற இந்தியா' மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் நாளை நடைபெறும் 'ஆசாதி75-புதிய நகர்புற இந்தியா' மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

Update: 2021-10-04 16:49 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி,  

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நாளை ( செவ்வாய்க்கிழமை) 'ஆசாதி75-புதிய நகர்புற இந்தியா' மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

உத்தரபிரதேசத்தின் 75 மாவட்டங்களில் உள்ள 75,000 பயனாளிகளுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - நகர்ப்புற (PMAY -U) வீடுகள் திட்டத்தை பிரதமர் டிஜிட்டல் முறையில் திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து இந்த திட்டத்தின் பயனாளிகளுடன்  உரையாடுகிறார். பின்னர் ஸ்மார்ட் சிட்டி மிஷன் மற்றும்  உத்தரபிரதேசத்தின் 75 நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுகிறார். 

லக்னோ, கான்பூர், வாரணாசி, பிரயாக்ராஜ், கோரக்பூர், ஜான்சி மற்றும் காஜியாபாத் உள்ளிட்ட ஏழு நகரங்களுக்கு FAME-II இன் கீழ் 75 பேருந்துகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் பல்வேறு முதன்மை பணிகளின் கீழ் செயல்படுத்தப்பட்ட 75 திட்டங்களை உள்ளடக்கிய அட்டவணை புத்தகத்தை வெளியிடுகிறார். 

இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு மந்திரி, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை மந்திரி, மாநில கவர்னர் மற்றும் உத்தரபிரதேச முதல்-மந்திரி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்