ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங்கிற்கு கொரோனா தொற்று

ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-04-01 05:47 GMT
ஸ்ரீநகர்,

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. இதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 72,330 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நேற்று 373 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் காவல்துறை டிஜிபி தில்பக் சிங்கிற்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தில்பக் சிங்கின் மனைவிக்கும் கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. 

வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரும் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். டிஜிபி தில்பக் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்