15 மாதங்களுக்கு பிறகு வெளிநாடு செல்கிறார் பிரதமர் மோடி

வங்க தேசத்தின் 50வது சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி 15-ம் தேதி வங்கதேசம் செல்கிறார்.

Update: 2021-03-09 01:04 GMT
புதுடெல்லி,

1971ல் கிழக்கு பாகிஸ்தானில் பிரிந்து வங்கதேசமாக உருவானது. இதன் 50வது ஆண்டு விழா வங்கதேசத்தில் கொண்டாடப் பட உள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி மார்ச் 26ல் வங்க தேசம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 15 மாதங்களுக்குப் பின் பிரதமர் மோடி வெளிநாடு செல்வது இதுவே முதன் முறை ஆகும்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா - மோடி பேச்சுக்குப் பின் இருவரும் தாஹா - மேற்கு வங்கம் நியூ ஜல்பைகுரி இடையிலான பயணிகள் ரெயில் சேவையை துவக்கி வைக்க உள்ளனர்.

மேலும் செய்திகள்