டெல்லியில் காற்று மாசு பாடு தொடர்ந்து அதிகரிப்பு

டெல்லியில் காற்று மாசுபாட்டின் தரம் அதிகரித்து 'மிகவும் மோசமான' பிரிவில் உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Update: 2020-11-08 05:00 GMT
புதுடெல்லி,

டெல்லியில் ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும் காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்படும். இந்த ஆண்டு குளிர்காலத்தின் தொடக்கத்திலேயே காற்று மிகவும் மாசுபட்டு உள்ளது. கடந்த சில நாட்களாகவே தலைநகரில் காற்றின் தரம் மோசமாக இருந்து வருகிறது. 

காற்று மாசுபாட்டை குறைக்க அரசு விழிப்புணர்வு மூலமாகவும் பல்வேறு கட்டங்களாக நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. டெல்லியின் அண்டை மாநிலங்களில் நிகழும் குண்டு வெடிப்பு போன்றவையும் காற்று மாசுபாட்டுக்கு காரணமாக அமைகிறது.

டெல்லி என்சிஆர் பகுதி தொடர்ந்து அதிக அளவு மாசுபாட்டை பதிவுசெய்தது கவலையைத் உண்டாக்குகிறது. இந்நிலையில் நேற்று காற்று மாசுபாட்டின் தரம் ( AQI)  தொடர்ந்து 'மிகவும் மோசமான' பிரிவில் உள்ளது. டெல்லியில் காற்று மாசுபாட்டின் தரம் 385 உடன் 'மிகவும் மோசமான' வகையிலும், நொய்டாவில் மாசு அளவு 486 என்ற மட்டத்துடன் 'கடுமையான' பிரிவிலும், குர்கானில் காற்று மாசுபாடு 350 உடன் 'மிகவும் மோசமாக' இருந்ததாக தரவுகளின்படி கூறப்படுகிறது. 

நேற்று முன்தினம் டெல்லியில் ஒட்டுமொத்த காற்று மாசு அளவு 486 ஆக பதிவாகியது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

காற்று அளவு ( 0 - 50 ) - நல்லது , ( 51 - 100 ) - திருப்திகரமானது, ( 101 - 200 ) - மிதமானது , ( 201 - 300 ) - மோசமாக, ( 301 - 400 ) - மிகவும் மோசமாக, மற்றும் ( 401 - 500 ) - கடுமையானது என்று கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்