பயங்கரவாத தாக்குதல்:இந்தியா ஆஸ்திரியாவுக்கு எப்போதும் துணை நிற்கும் ; பிரதமர் மோடி இரங்கல்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி இந்தியா ஆஸ்திரியாவுக்கு எப்போதும் துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்

Update: 2020-11-03 07:00 GMT
புதுடெல்லி

ஆஸ்திரியாவின் மத்திய வியன்னா நகரில் பரபரப்பான பகுதியில் திடீர் என புகுந்த துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் கண்மூடித்த்னமாக சுட்டனர்  இதில் 3 பேர்  பலியானார்கள் பலர் தாக்குதலில் காயமடைந்துள்ளனர், இதனை  ஆஸ்திரியா ஒரு "மக்கள் விரோத பயங்கரவாத தாக்குதல்" என்று வர்ணித்து உள்ளது.

இந்த தாக்குதலின் போது காயமடைந்த ஒரு பெண் இன்று அதிகாலையில் காயங்களுடன் இறந்துவிட்டதாக வியன்னா மேயர் மைக்கேல் லுட்விக் தெரிவித்து உள்ளார். பயங்கரவாதி என சந்தேகப்படும் நபர் ஒருவர் போலீஸ் படையினரால் கொல்லப்பட்டார்.

ஆறு வெவ்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதிகாரிகள் நகர மையத்திலிருந்து விலகி இருக்கவும், பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் எனவும் மக்களைகேட்டு கொண்டு உள்ளனர். இன்று பள்ளிகள் அனைத்தும்  மூடப்பட்டு உள்ளன.

ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 15 பேர் மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 7 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

ஆஸ்திரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில் ஆஸ்திரியாவின் தலைநகரில் நடந்த பயங்கரமான தாக்குதல்களால் தான் “அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்” "இந்த துயரமான நேரத்தில்" இந்தியா ஆஸ்திரியாவுக்கு எப்போதும் துணை இருப்பதாக அவர் கூறி உள்ளார்.



மேலும் செய்திகள்