மராட்டிய துணை முதல் மந்திரி அஜித் பவார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

Update: 2020-11-02 12:00 GMT
மும்பை,

மராட்டிய  மாநில துணை முதல் மந்திரி அஜித் பவாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 26 ஆம் தேதி  மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான அறிகுறிகளுடன் தொற்று பாதித்த அஜித் பவாருக்கு  மருத்துவமனையில்   தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  

இதையடுத்து, தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்த அஜித் பவார் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தொற்றில் இருந்து குணம் அடைந்தாலும் மேலும் சில தினங்களுக்கு அஜித் பவார்  வீட்டுத்தனிமையில் இருக்க வேண்டும் என  மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

மேலும் செய்திகள்