முதற்கட்ட தடுப்பு ஊசி அடுத்த ஆண்டு ஜனவரி - ஜூன் மாதம் வரை வழங்கத் திட்டம் - மத்திய சுகாதாரத்துறை செயலாளர்
முதற்கட்ட தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார்.
புதுடெல்லி
கொரோனா தடுப்பு மருந்து கிடைத்ததும் முதற்கட்டமாக 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது:-
கொரோனா தடுப்பு மருந்து கிடைத்ததும் முதற்கட்டமாக 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும்
3 கோடியில் 70 லட்சம் மருத்துவர்கள் துணை மருத்துவர்களும் அடங்குவர், மேலும் 2 கோடி முன்னணி சுகாதார ஊழியர்கள் அடங்குவர்.
3 கோடி தடுப்பு மருந்து வழங்குவதற்கான உள்கட்டமைப்பு ஏற்கனவே நாட்டில் உள்ளது. இந்த முதற்கட்ட தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதத்தில் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு தடுப்பூசி கிடைத்த பிறகும், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது போன்ற பாதுகாப்பை மக்கள் குறைக்க முடியாது என கூறினார்.