ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்வதற்காக இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்வதற்காக இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை விண்ணப்பிக்கலாம்.

Update: 2020-10-12 08:34 GMT
புதுடெல்லி

இந்திய அரசின் சார்பில் ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்கப்பத்திரத்தில் ஒரு கிராம் ஐயாயிரத்து 51 ரூபாய் என்கிற விலையில் முதலீடு செய்யலாம்.இந்தப் பத்திரங்களில் முதலீடு செய்வதற்குப் பொதுத்துறை வங்கிகள், குறிப்பிடத் தக்க அஞ்சலகங்கள் ஆகியவற்றில் வரும் வெள்ளிக்கிழமை வரை விண்ணப்பிக்கலாம்.

இணையத்தளம் வழியாக விண்ணப்பித்துப் பணம் செலுத்துவோர் ஒரு கிராமுக்கு ஐயாயிரத்து ஒரு ரூபாய் செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தங்கப்பத்திர முதலீட்டின் முதிர்வுக்காலம் 8 ஆண்டுகள் ஆகும். ஐந்தாண்டுகளுக்குப் பின் வட்டி வழங்கப்படும், பத்திரத்தை ஒப்படைத்து முதலீட்டைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது.

மேலும் செய்திகள்