மராட்டியத்தின் நற்பெயரை கெடுக்க மத்திய அரசு சதி செய்தது அம்பலம் - காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

மராட்டியத்தின் நற்பெயரை கெடுக்க மத்திய அரசு சதி செய்தது அம்பலமானது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

Update: 2020-10-04 05:45 GMT
மும்பை,

நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் மராட்டிய அரசின் நற்பெயரை கெடுக்க மத்தி அரசு சதி திட்டம் தீட்டியதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. 

இதுதொடர்பாக அந்த கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் கூறியிருப்பதாவது:-

எய்ம்ஸ் மருத்துவ குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடுத்து மும்பை போலீசார் விசாரணையை நேர்மையாகவும், உண்மையாகவும் நடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் இது போலி ஊடகங்கள் உதவியுடன் மோடி அரசு மராட்டியத்தின் நற்பெயரை கெடுக்க நடத்திய சதி என்பது தெளிவாகி உள்ளது. இந்த சதிக்கு மூளையாக இருந்தவர்களான பாரதீய ஜனதா தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த போலி ஊடக செயல்பாட்டாளர்களை கண்டறிய மராட்டிய அரசு சிறப்பு புலனாய்வு பிரிவை அமைக்க வேண்டும். நமது ஜனநாயகத்தை காப்பாற்ற இதுபோன்ற போலிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

எனினும் காங்கிரசின் குற்றச்சாட்டை பாரதீய ஜனதா மறுத்துள்ளது.

மேலும் செய்திகள்