பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து மத்திய சுகாதாரத்துறை ரூ.893.93 கோடி பெற்றுள்ளது - ஹர்ஷ் வர்தன் தகவல்
பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ரூ.893.93 கோடி பெற்றுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த மார்ச் மாதம் பரவத்தொடங்கியபோது, அதன் தடுப்பு நடவடிக்கைக்காகவும், மீட்பு நடவடிக்கைக்காகவும் நாட்டு மக்கள் நன்கொடை அளிக்க வசதியாக ‘பி.எம்.கேர்ஸ் பண்ட்’ (பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலை நிதியம்) தொடங்கப்பட்டது.
இது பற்றி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு மார்ச் கடைசி வாரத்தில் அறிவித்து, நன்கொடைகள் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து பல தனியார் நிறுவனங்கள், அரசு அமைப்புகள், பிரபலங்கள் உள்ளிட்ட தனி நபர்கள் நன்கொடைகளை வாரி வழங்கினர். ரூ.2.25 லட்சத்துடன் தொடங்கிய பி.எம்.கேர்ஸ் நிதிக்கு மார்ச் 27-ந் தேதியில் இருந்து 31-ந் தேதி வரையில் (ஐந்தே நாளில்) ரூ.3,076.62 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ரூ.893.93 கோடி பெற்றுள்ளது என ஹர்ஷ் வர்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கும், மாநில அரசுகளுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என காங்கிரஸ் கட்சியின் அதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து ரூ.893.93 கோடியை சுகாதாரத்துறை பெற்றுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 50 ஆயிரம் வென்டிலேட்டர்களுக்காக இது பெறப்பட்டது என விளக்கம் அளித்தார்.