இந்தியாவில் இதுவரை 5.8 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன: மத்திய சுகாதாரத் துறை

இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கண்டறிய இதுவரை 5.8 கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2020-09-15 17:25 GMT
புதுடெல்லி,


நாடு முழுவதும் இதுவரை 5.8 கோடி கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இது குறித்து கூறியதாவது:-

நாட்டில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கையில், மகாராஷ்டிரத்தில் 29.3 சதவிகிதம், கர்நாடகத்தில் 9.9 சதவிகிதம், ஆந்திரத்தில் 9.4 சதவிகிதம், உத்தரப் பிரதேசத்தில் 6.8 சதவிகிதம் மற்றும் தமிழகத்தில் 4.7 சதவிகிதம் என 5 மாநிலங்களில் மட்டும் 60 சதவிகிதத்தினர் உள்ளனர்.

 பிற மாநிலங்களில் 39.6 சதவிகிதத்தினர் உள்ளனர். தற்போது நாடு முழுவதும் 38.5 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட 76 லட்சம் பரிசோதனைகள் உள்பட, நாடு முழுவதும் இதுவரை 5.8 கோடி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன” என்றார். 

மேலும் செய்திகள்