‘கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயார்’ பின்னணி பாடகி ஹேமா சர்தேசாய் அறிவிப்பு

‘கோவேக்சின் தடுப்பூசியை தாமாக முன் வந்து போட்டுக்கொள்ளத்தயார் என கோவாவை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி ஹேமா சர்தேசாய் அறிவித்துள்ளார்.

Update: 2020-07-22 22:00 GMT
பனாஜி,

கொரோனா வைரஸ் தொற்றை தடுத்து நிறுத்துவதற்காக ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தார், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து கோவேக்சின் என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர்.

இதை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் சோதனை தொடங்கி உள்ளது. இந்த தடுப்பூசியை தாமாக முன் வந்து போட்டுக்கொள்ளத்தயார் என கோவாவை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி ஹேமா சர்தேசாய் அறிவித்துள்ளார்.

இதையொட்டி அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கோவாக்சின் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில் நான் தன்னார்வலராக பங்கேற்க தயார். இந்த தடுப்பூசியை போட்டபின்னர் கொரோனா வைரஸ் எதிர்ப்புச்சக்தியை நான் பெற்றால், அது ஆயிரக்கணக்கான மக்கள் நம்பிக்கை வைக்க வழிநடத்தும்” என கூறி உள்ளார். மேலும், “இதற்கான வேண்டுகோளை கோவா முதல்-மந்திரிக்கும், சுகாதார மந்திரிக்கும் வைக்கிறேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்