அசாமில் வெள்ளத்திற்கு 59 பேர் பலி; 45.4 லட்சம் பேர் பாதிப்பு
அசாமில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்கு 59 பேர் பலியாகி உள்ளனர்.
கவுகாத்தி,
அசாமில் பருவமழையை தொடர்ந்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் 30 மாவட்டங்கள் வரை பாதிக்கப்பட்டு உள்ளன. வெள்ள நீரானது வீடுகள், கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு தஞ்சம் தேடி வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அசாமில் நேற்றுவரை வெள்ள பாதிப்புக்கு 59 பேர் பலியாகி உள்ளனர். 45 லட்சத்து 40 890 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது.
இதற்காக அசாம் மாநில பேரிடம் மேலாண் கழகம் வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.