உத்தரபிரதேச மந்திரிக்கு கொரோனா பாதிப்பு
உத்தரபிரதேச மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரியாக இருப்பவர் உபேந்திரா திவாரி. இவர் கடந்த 2 நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து நேற்று முன்தினம் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவு நேற்று தெரியவந்தது.
இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.