டெல்லியில் மேலும் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மாநில சுகாதாரத்துறை

டெல்லியில் மேலும் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.;

Update: 2020-07-12 13:29 GMT
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டெல்லியில் இன்று புதிதாக 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் டெல்லியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,12,494 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் இன்று ஒரேநாளில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் டெல்லியில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 3,371 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் டெல்லி முழுவதும் 2,276 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது டெல்லியில் கொரோனாவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89,968 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை19,155 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்