சமூக வலைதளங்களில் உலா வரும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி?
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக சமூகவலைதளங்களில் உலாவருகின்றன.
புதுடெல்லி,
நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிப்ரவரி மாதம் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் தொடங்கியது.
சில பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்ற போதும் பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
இதையடுத்து ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு அகமதிப்பீடு, செயல்முறை தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க கடந்த மாதம் 26 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது. இதனால் மாணவர்களின்
மதிப்பெண்களை கணக்கீடும் பணியில் சிபிஎஸ்இ ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில், ஜூலை 15 முதல் ஜூலை 11-ம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் அறிவிப்பு தேதியை முன்கூட்டியே வெளியிட சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த போலியான செய்திகள் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளிடையே பெரும் குழப்பத்தை உருவாக்கியது.
இந்நிலையில், இது குறித்து சிபிஎஸ்இ தரப்பில் கூறியதாவது:-
சிபிஎஸ்இ 12 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகும் என்ற தேதியை சிபிஎஸ்இ அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலானது போலியானதாகும்.
சிபிஎஸ்இ, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.