மிசோரம் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.3 என பதிவானது

மிசோரம் மாநிலத்தில் 4.3 ரிக்டர் அளவுள்ள லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2020-07-09 14:21 GMT
ஐஸ்வால்,

மிசோரம் மாநிலம் சம்பாய் மாவட்டத்தில் இன்று பிற்பகல் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 என பதிவானது. இதுகுறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலில், “வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் சம்பாய் மாவட்டத்தின் தென்கிழக்கே நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. 10 கிமீ ஆழத்தில் இது மையம் கொண்டுள்ளது.

சரியாக பிற்பகல் 2.28 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் அசாம் மாநிலத்தின் சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது நிலநடுக்கத்தினால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்