இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-04 04:39 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் தினந்தோறும் இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில்  இன்று  கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ஒரே நாளில் 22 ஆயிரத்து 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 48 ஆயிரத்து 315  ஆக உயர்ந்துள்ளது. 

அதேபோல், கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 442 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,655 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பிலிருந்து  3,94,227 பேர் குணமடைந்துள்ள நிலையில்,  2,35,433 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்