24 மணி நேரத்தில் தொடர்ந்து ஆறாவது நாள் 9,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள்
தொடர்ச்சியாக ஆறாவது நாள் 9,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது.9983 கொரோனா பாதிப்புகள் பதிவாகி மிகப்பெரிய ஒற்றை நாள் உயர்வாகி உள்ளது.
புதுடெல்லி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9983 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தொடர்ச்சியாக ஆறாவது நாளாக 9,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இது மிகப்பெரிய ஒற்றை நாள் உயர்வாகும்.உலகில் ஆபத்தான வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்தாவது நாடாக இந்தியா மாறி உள்ளது.
கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 2,56,611 ஆக அதிகரித்து உள்ளது. பலி எண்ணிக்கை 7,135 ஆக உயர்ந்து உள்ளது. சிகிச்சை பெறுவோர் 1,25,381 - குணமடைந்தோர் - 1,24,095
இந்தியாவில் நோயை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடிய நோயாளிகளின் மீட்பு விகிதம் தற்போது 48.35 சதவீதமாகவும், வளர்ச்சி விகிதம் 3.89 சதவீதமாகவும் உள்ளது.
ராஜஸ்தானில் மேலும் 262 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 10,599 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா பாதிப்பிற்கு 2,605 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மராட்டியத்தில் நேற்று மேலும் 3,007 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எண்ணிக்கை 85,975 ஆக உயர்ந்து சீன பாதிப்பை முந்தியது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 39,314 பேர் குணமடைந்துள்ளனர் -
டெல்லியில் ஒரே நாளில் 1,282 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 28,936 ஆக அதிகரிப்பு கொரோனாவிலிருந்து 10,999 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 812 பேர் உயிரிழந்துள்ளனர்