வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள், தொழிலதிபர்கள் இந்தியா வர மத்திய அரசு அனுமதி
வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள், தொழிலதிபர்கள் இந்தியா வர மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஜூன் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனை கூட்டம்
நடந்தது. கூட்டத்திற்கு பின் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி,
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டு தொழிலதிபர்கள், மற்றும் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுக்கான விசா மற்றும் பயண கட்டுப்பாடுகளில் தளர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.