தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் 8 பேருக்கு கொரோனா
தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாத நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்த 8 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள மத்திய ஆயுதப்படை போலீசுக்கான ஆஸ்பத்திரியில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2 வாரங்களுக்குமுன்பு டிரைவர் ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 8 பேரும் அந்த டிரைவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 33 வயது மருத்துவ பணியாளர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பியது நினைவுகூரத்தக்கது.