சென்னையில் இருந்து மேகாலயா சென்றவருக்கு கொரோனா தொற்று

சென்னையில் இருந்து மேகாலயா சென்றவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-05-20 20:00 GMT
ஷில்லாங், 

கொரோனா வைரஸ் பரவியதால் 50 நாட்களுக்கும் மேலாக நாட்டில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரெயில்கள் மூலம் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

அந்தவகையில், சென்னையில் இருந்து மேகாலயா மாநிலத்துக்கு சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அவர் அங்குள்ள கொரோனா சிறப்பு முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரோடு சேர்ந்து மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் இதில் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். ஒருவர் உயிரிழந்துவிட்டார். இதனால் சென்னையில் இருந்து சென்றவர் மட்டுமே தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்று அம்மாநில முதல்-மந்திரி கன்ராட் சங்மா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்