பொருளாதார தொகுப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்;ஏழைகளுக்கு வங்கி கணக்கில் பணம் போடுங்கள்- ராகுல்காந்தி

பிரதமர் பொருளாதார தொகுப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும், ஏழைகளுக்கு வங்கியில் பணம் போடுங்கள் என ராகுல்காந்தி கூறி உள்ளார்.

Update: 2020-05-16 08:14 GMT
புதுடெல்லி: 

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கு ஆகியவற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்குகளில் உடனடியாக பணத்தை செலுத்தாவிட்டால், அது ஒரு பேரழிவு பிரச்சினை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று  மத்திய அரசை எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் இதுவரை 86,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 2,700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தினசரி கூலிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

காணொலி மூலம் செய்தியாளர்களிடம் உரையாற்றிய ராகுல்காந்தி கூறியதாவது:-

கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸால் முன்மொழியப்பட்ட குறைந்த பட்ச வருமான திட்டத்தை எடுத்துரைத்தார். இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 72,000 ரூபாய்  வருமான உதவி சமூகத்தின் ஏழ்மையான மக்களுக்கு கிடைக்க வேண்டும். இதேபோன்ற திட்டத்தை கொண்டு வருமாறு மத்திய அரசை வலியுறுத்தினார்.

ஒரு தாய் தனது குழந்தைகளுக்கு சாப்பிட உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக எதையும் செய்வதைப் போலவே, அரசாங்கமும் மக்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை போட வேண்டும். நாம் அவ்வாறு செய்யாவிட்டால், இது ஒரு பேரழிவு பிரச்சினையாக மாறும் பிரதமர் பொருளாதார தொகுப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும், ஏழைகளுக்கு வங்கியில் பணம் போடுங்கள் என கூறினார்.

மேலும் செய்திகள்