கொரோனா ரெமடிசிவிர் மருந்து விற்பனை செய்ய அமெரிக்க நிறுவனத்துடன் இந்திய நிறுவனம் ஒப்பந்தம்
கொரோனா சிகிச்சைக்கான ரெமடிசிவிர் மருந்து விற்பனை செய்ய அமெரிக்க நிறுவனத்துடன் இந்திய நிறுவனம் ஒப்பந்தம் செய்து உள்ளது.
புதுடெல்லி
ராய்ட்டர்ஸ் தகவல்படி கொரோனா தொற்றுநோய் உலகளவில் கிட்டத்தட்ட 286,000 பேரை பலிவாங்கி உள்ளது மேலும் பல மருந்து தயாரிப்பாளர்கள் வெடிப்பை எதிர்த்துப் போராடுவதற்கான சாத்தியமான சிகிச்சை அல்லது தடுப்பூசியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையில்லை. கொரோனா வைரஸ் நாவலால் ஏற்படும் சுவாச நோய்க்கு ரெமடிசிவிர் மருந்து மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரெமெடிவிர் மருந்துக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தைப் பெற்றது.
இந்தியாவின் ஜுபிலண்ட் லைஃப் சயின்சஸ் லிமிடெட் செவ்வாயன்று அமெரிக்காவின் கிலியாட் நிறுவனத்துடன் கொரோனா சிகிச்சை மருந்து ரெமடிசிவிர் இந்தியா உட்பட 127 நாடுகளில் விற்பனை செய்வதற்கான உரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக தெரிவித்துள்ளது.
ஏறக்குறைய அனைத்து குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமான நாடுகளிலும், சில உயர் வருமான நாடுகளிலும் மருந்து தயாரிப்பதற்கும் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் ஜுபிலண்ட் உரிமை பெற்று உள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள பல பொதுவான மருந்து தயாரிப்பாளர்களுடன் வளரும் நாடுகளுக்கு ரெமெடிவிர் தயாரிக்க நீண்டகால உரிமங்களை பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், உற்பத்திக்கு உதவ தொழில்நுட்பத்தை இது வழங்கும் என்றும் கிலியட் கூறியுள்ளது.