‘கொரோனா போர்வீரர்களுக்கு’ வணக்கம்: நாடு முழுவதும் அவர்களுடன் நிற்கிறது - அமித் ஷா

‘கொரோனா போர்வீரர்களுக்கு’ வணக்கம் என்றும், நாடு முழுவதும் அவர்களுடன் துணை நிற்கிறது என்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-03 14:29 GMT
புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் ஒப்பிடமுடியாத பங்களிப்பு மற்றும் தியாகத்திற்காகவும் கொரோனா போர்வீரர்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வணக்கம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “கொரோனா போராளிகளான கதாநாயகர்களுக்கு, இந்தியா தனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது. மோடி அரசாங்கமும், தேசம் முழுவதும் உங்களுடன் நிற்கிறது என்று நான் உறுதி கூறுகிறேன். சவால்களை வாய்ப்புகளாக மாற்றி, கொரோனாவிடமிருந்து தேசத்தை நாம் விடுவிக்க வேண்டும். சுகாதாரமான, செழிப்பான, வலுவான நாடாக இந்தியாவை உருவாக்கி, உலகிற்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். ஜெய்ஹிந்த்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “கொரோனா வைரசிடம் இருந்து நாட்டை காப்பதற்காக, இரவும் பகலும் அயராது உழைக்கும் மருத்துவர்கள், காவல்துறையினர், துணை இராணுவப் படையினர் மற்றும் இதர போராளிகளுக்கு, இந்திய இராணுவப் படையினர் மரியாதை செலுத்திய காட்சிகள் மனதை நெகிழச் செய்கின்றன. கொரோனாவுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் இந்தப் போராளிகள் வெளிப்படுத்தும் துணிவு நிச்சயம் மரியாதைக்குரியது” என்றும் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்