இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 37,776 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 37776 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-05-02 12:56 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தினந்தோறும் இந்த வைரஸ் தொற்றால் சுமார் 1,500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

 கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. 

 மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி,  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,411 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை  37776 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1223 ஆக உயர்ந்துள்ளது. 10018-பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா  பாதிப்பால் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 26535 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் செய்திகள்