யெஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு

‘யெஸ் பேங்க்’ பல மோசமான கடன்களை வழங்கியதால் மூலதன நெருக்கடியில் உள்ளது. இதைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கி நேற்று யெஸ் வங்கிக்கு சில காலம் கடன்கள் வழங்குவதை நிறுத்திவைக்கும்படி கட்டுப்பாடு விதித்தது.

Update: 2020-03-05 22:50 GMT
மும்பை, 

ஒரு வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் மறு உத்தரவு வரும்வரை இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. வங்கியின் நிர்வாகத்தையும் உடனடியாக மாற்றி அமைக்கவும் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பிரஷாந்த் குமார் ‘யெஸ் பேங்க்’ நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்