டெல்லி சட்டப்பேரவை தேர்தல் - விதிகளை மீறியதாக 25 வழக்குகள் பதிவு

டெல்லியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணைய அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2020-01-13 12:43 GMT
புதுடெல்லி,

டெல்லி சட்டப்பேரவைக்கு, பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 25 வழக்குகள்  பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும், 109 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அனுமதியின்றி வைக்கப்பட்ட 3 லட்சத்து 76 ஆயிரத்து 446 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதுடன், கலால் வரி சட்டத்தின் கீழ் 229 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணைய அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்