திகாரில் 3-ம் எண் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும்; மீரட்டில் இருந்து ஊழியர் வருகிறார்

நிர்பயா வழக்கில் குற்ற வாளிகள் 4 பேரையும் திகார் சிறையில் தூக்கிலிட டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் திகார் சிறையில் தூக்கிலிடும் ஊழியர் பணியிடம் காலியாக இருக்கிறது.

Update: 2020-01-07 23:00 GMT
புதுடெல்லி, 

திகார் சிறை அதிகாரி ஒருவரிடம் இதுபற்றி கேட்டபோது, “4 குற்றவாளிகளில் 3 பேர் இங்கு 2-ம் எண் சிறையிலும், ஒருவர் 4-ம் எண் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 

கோர்ட்டு உத்தரவுப்படி 22-ந் தேதி காலை 7 மணிக்கு அவர்கள் 3-ம் எண் சிறையில் தூக்கிலிடப்படுவார்கள். இதற்காக மீரட் சிறையில் இருந்து தூக்கிலிடும் ஊழியர் வரவழைக்கப்படுவார்” என்றார்.

மேலும் செய்திகள்