சிறுமிகள் கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கு கருணை மனு அருகதை இல்லை - ஜனாதிபதி கருத்து
சிறுமிகள் கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கு கருணை மனு தாக்கல் செய்யும் அருகதை இல்லை என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாட்டில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து பல்வேறு தரப்பினரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் 4 பேரால் கற்பழித்து எரித்து கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேரும் நேற்று போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சிறுமிகள் கற்பழிக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்த கொடூர செயலில் ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிக்க ஏதுவாக மத்திய அரசு புதிதாக போஸ்கோ சட்டமும் இயற்றி உள்ளது. 12 வயதுக்கு குறைவான சிறுமிகளை கற்பழிப்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க இந்த சட்டத்தில் வழிவகை உள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இதுதொடர்பாக ஒரு கருத்தை ‘டுவிட்டர்’ வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “பெண்கள் பாதுகாப்பு மிகவும் முக்கியமான பிரச்சினை. போஸ்கோ சட்டத்தின்கீழ் தண்டனை விதிக்கப்படும் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கருணை மனு தாக் கல் செய்யும் உரிமை வழங்கக்கூடாது. அதற்கான அருகதை அவர்களுக்கு இல்லை. நாடாளுமன்றம் கருணை மனுக்கள் தொடர்பான முறையை மறுஆய்வு செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ராஜஸ்தான் மாநிலம் சிரோஹியில் பிரம்ம குமாரிகள் சார்பில் நடைபெற்ற பெண்கள் அதிகாரம் தொடர்பான 2 நாள் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார். அப்போதும் அவர் இதே கருத்தை வலியுறுத்தினார்.
மேலும், பெண்கள் பாதுகாப்பு என்பது ஒட்டுமொத்த சமுதாயத்தின் பொறுப்பு என்றும், கருணை மனு தாக்கல் செய்யும் முறை மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.