நாடாளுமன்ற கேண்டீனில் இனி எம்.பி.,க்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது

நாடாளுமன்ற கேண்டீனில் இனி எம்.பி.க்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது என தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-12-05 10:30 GMT
புதுடெல்லி

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள  கேண்டீனில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் அல்லாமல், நாடாளுமன்ற ஊழியர்கள், பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள் என தினமும் சராசரியாக நாடாளுமன்ற கேண்டீனில் 4,500 பேர் உணவருந்துகின்றனர்.

நாடாளுமன்ற கேண்டீனில் மிக மலிவான விலையில் உணவு பொருட்கள் விற்கப்பட்டன. இது குறித்து சர்ச்சை வெடித்ததை அடுத்து, கடந்த ஆண்டு இறுதியில் உணவு பொருட்களின் விலை ஓரளவுக்கு அதிகரித்தது.

இந்த நிலையில், நாடாளுமன்ற கேண்டீனில் இனி எம்பிக்களுக்கு சலுகை விலையில் உணவு கிடையாது என்று தகவல் வெளியாகியுள்ளது. கேண்டீனுக்கு ஒதுக்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்ய எம்பிக்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கேண்டீனில் உள்ள உணவுகள் இனி உரிய விலையில் விற்கப்படும் என தெரிகிறது.

இதன் மூலம், மானியம் ரத்து செய்யப்பட்டதால் ரூ.17 கோடி ஆண்டு தோறும் சேமிக்கப்படும். மக்களவை சபாநாயகர் ஓம். பிர்லா அறிவுறுத்தலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மானியத்தை அகற்றுவதற்கு முன் உணவுப் பொருட்கள் விற்கப்பட்ட விலை பட்டியல் .

பொருட்கள்

விலை விவரம்

டீ

ரூ.5

காபி

ரூ.5

பிரட் பட்டர்

ரூ.6

வடை பிளேட்  

ரூ.12

கட்லட்

ரூ.18

அரிசி உப்புமா

ரூ.18

போண்டா

ரூ.7

சூப்

ரூ.14

கேசரி

ரூ.24

வெஜ் தாளி

ரூ.35

வெஜ் குழம்பு

ரூ.7

பருப்பு

ரூ.5

சப்பாத்தி

ரூ.2

கீர்

ரூ.18

சாலட்

ரூ.9

சிக்கன் குழம்பு

ரூ.50

சிக்கன் பிரியாணி

ரூ.65

சிக்கன்

ரூ.60

மட்டன் குழம்பு

ரூ.40

மேலும் செய்திகள்