நேரு அருங்காட்சியக குழுவில் இருந்து காங்கிரசார் நீக்கம் - மத்திய அரசு நடவடிக்கை

நேரு அருங்காட்சியக குழுவில் இருந்து காங்கிரசாரை நீக்கம் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2019-11-05 20:31 GMT
புதுடெல்லி,

டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சொசைட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைவராகவும், ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் துணைத்தலைவராகவும் உள்ளனர். இந்த குழுவை மத்திய அரசு மாற்றி அமைத்தது. ஏற்கனவே இந்த குழுவில் உறுப்பினர்களாக இருந்த காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், கரன்சிங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு பதிலாக டி.வி. செய்தியாளர் ரஜத் சர்மா, விளம்பரதாரர் பிரசூன் ஜோஷி ஆகியோர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்