‘மஹா புயல்’ குஜராத், மகாராஷ்டிராவில் நாளை கனமழை- இந்திய வானிலை ஆய்வு மையம்

‘மஹா புயல்’ காரணமாக நாளை குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2019-11-04 14:13 GMT
புதுடெல்லி,

அரபிக் கடலின் மத்திய-கிழக்கு பகுதியில் ‘மஹா புயல்’ மையம் கொண்டுள்ளது.  இந்த புயல் காரணமாக வரும் 5 ஆம் தேதி(நாளை) குஜராத் மற்றும் மகாராஷ்டிராவின் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்வதால் வரும் 6 மற்றும் 7 ஆம் தேதிளில் மழை படிப்படியாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் மணிக்கு சுமார் 90 முதல் 100 கி.மீ வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து இன்று மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் மத்திய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவினர் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக கூட்டத்தின் முடிவில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்