வளர்ச்சியை எட்ட தொழில்நுட்பம் பாலமாக அமையும் - பிரதமர் மோடி பேச்சு
அனைவருக்கும் வளர்ச்சியை எட்ட தொழில்நுட்பம் ஒரு பாலமாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன், அதன் தலைமை பொருளாதார நிபுணர் ரூபா புருஷோத்தமன் ஆகியோர் இணைந்து எழுதிய ‘பிரிட்ஜிட்டல்’ என்ற புத்தகத்தை பிரதமர் மோடி நேற்று தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார்.
முதல் பிரதியை ரத்தன் டாடா பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:-
தொழில்நுட்பத்தை தவறாக சித்தரிக்க பெரும் முயற்சியே நடந்து வருகிறது. ஒரு அச்சமான சூழ்நிலை உருவாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் தொழில்நுட்பம் என்பது நாட்டின் மக்கள்தொகைக்கு சவாலாக காட்டப்படுகிறது.
செயற்கை அறிவின் ஆபத்துகள் பற்றியோ, மனிதர்களை ரோபோக்கள் எப்போது மிஞ்சும் என்பது பற்றியோ விவாதம் நடத்தக் கூடாது. செயற்கை அறிவுக்கும், மனித நோக்கங்களுக்கும் இடையே எப்படி பாலம் உருவாக்குவது என்பது பற்றித்தான் விவாதம் நடத்த வேண்டும்.
தொழில்நுட்பம் என்பது ஒரு பாலம் போன்றது, பிரிக்கக்கூடியது அல்ல. உணர்வுகள்-சாதனைகள் இடையிலும், தேவை-வினியோகம் இடையிலும், அரசு-ஆட்சிமுறை இடையிலும் அது பாலத்தை உருவாக்குகிறது. ‘அனைவருடனும், அனைவருக்காகவும் வளர்ச்சி’யை எட்டுவதற்கு அது பாலமாக அமைகிறது. படைப்பாக்கம், உறுதியான மனநிலை ஆகியவை வேகமாக வளரும் உணர்வுள்ள இந்தியாவுக்கு அவசியமானவை.
எனவே, தொழில்நுட்பம் உருவாக்கும் சவால்களை வாய்ப்புகளாக மாற்ற வேண்டும். உதாரணமாக, தபால் அமைப்புக்கு தொழில்நுட்பத்தால் உண்டான இடையூறுகள் எல்லாம் தொழில்நுட்பம் சார்ந்த வங்கி நடைமுறையாக மாற்றப்பட்டு விட்டது. இப்படி உருவான அஞ்சலக பட்டுவாடா வங்கி மூலம் லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகிறார்கள். தபால்காரர்கள், வங்கி அதிகாரி ஆகிவிட்டார்கள்.
கடந்த 5 ஆண்டுகளில், ஜன்தன் யோஜனா, உஜ்வாலா யோஜனா, ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட எத்தனையோ திட்டங்களை புரட்சிகரமாக மாற்றியதில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. அரசுத்துறைகளிடையே நிலவும் வேறுபாடுகளை நீக்கவும் தொழில்நுட்பம் பயன்பட்டுள்ளது.
இரண்டாம்நிலை, மூன்றாம்நிலை நகரங்களில் ‘ஸ்டார்ட் அப்’ திட்டங்கள் வேகமான வளர்ச்சி பெறவும் தொழில்நுட்பம் உதவியது.
நம்பிக்கை உணர்வு நிரம்பி வழியும் இந்த புத்தகத்தை எழுதியவர்களை பாராட்டுகிறேன். கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையை தொழில்நுட்பம் ஆக்கப்பூர்வமாக மாற்றியுள்ள தருணத்தில் இப்புத்தகம் வந்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
எதிர்காலத்தில், மனிதர்களும், தொழில்நுட்பமும் எவ்வாறு ஒருவருக்கொருவர் பயனடையும் வகையில் செயல்படுவது என்பதை பற்றி இந்த புத்தகம் விளக்குகிறது. மனித சக்திக்கு மாற்றாக தொழில்நுட்பத்தை கருதாமல், நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்க தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதையும் விளக்குகிறது.
இந்த நிகழ்ச்சியில், அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஆகிய நாடுகளின் தூதர்கள், பல்வேறு அமைச்சகங்களின் செயலாளர்கள், இந்திய தொழில் கூட்டமைப்பு உள்ளிட்ட தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், டாடா குழும உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.