46 லட்சம் பேரை நோய்களில் இருந்து மீட்டது பெரிய சாதனை - பிரதமர் மோடி பெருமிதம்
ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் ஓராண்டு நிறைவு செய்துள்ளது. இதில் 46 லட்சம் பேரை நோய்களில் இருந்து மீட்டது இந்த திட்டத்தின் பெரிய சாதனை என்று பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,
மத்திய அரசின் முக்கிய திட்டமான ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் முதலாவது ஆண்டை நிறைவு செய்தது. இதுதொடர்பாக டெல்லியில் நடைபெற்ற கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். இந்த திட்டத்தின் பயனாளிகள் சிலரிடம் அவர் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
ஏழை மக்கள் சிகிச்சை பெறுவதற்காக தங்கள் நிலத்தையோ அல்லது நகைகளையோ அடமானம் வைக்காமல், இந்த திட்டத்தின் உதவியால் சிகிச்சை பெற்றார்கள் என்பது மிகப்பெரிய திருப்தியை அளிக்கிறது. இந்தியாவின் இந்த சுகாதார திட்டம் உலகிற்கே எடுத்துக்காட்டாக உள்ளது. புதிய இந்தியாவுக்கான பல புரட்சிகர திட்டங்களில் ஆயுஷ்மான் பாரத் என்ற இந்த திட்டமும் ஒன்று.
46 லட்சம் பேர் தங்கள் நோயின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டனர் என்பதே இந்த திட்டத்தின் மிகப்பெரிய சாதனை. இந்த திட்டத்தில் தவறு நடக்காத அளவுக்கு மேலும் பல முன்னேற்றங்களை கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறிய நகரங்களில் தேவை அதிகரித்துவருவதால் நவீன மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5-7 ஆண்டுகளில் பல புதிய ஆஸ்பத்திரிகள் உருவாகும். அதன்மூலம் 11 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.
டெல்லியில் உதவி செயலாளர்கள் (2017-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது பல அதிகாரிகள் மாவட்டங்களை முன்னேற்றுவது முதல் வெளிப்படைத்தன்மை மற்றும் விரைவான செயல்பாடுகளுக்கான நிர்வாக தீர்வுகள் வரையிலான தங்கள் ஆலோசனைகளை பிரதமரிடம் சமர்ப்பித்தனர்.
இதற்காக அவர்களுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி கூறியதாவது:-
உங்கள் புதிய ஆலோசனைகள், புதிய கருத்துகள் மற்றும் கண்ணோட்டங்களை வரவேற்கிறேன். நீங்கள் பொறுப்பேற்கும் பணிகளில் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன். உங்களின் வெற்றி இந்த தேசத்துக்கு முக்கியமானது. உங்கள் வெற்றி பொதுமக்கள் பலரின் வாழ்க்கையை முன்னேற்றும்.
ஒரு திட்டத்தை நிறைவேற்றும் முன்பு பலதரப்பினரிடம் இருந்தும் ஆலோசனைகள் கேட்க வேண்டும். அவைகளை ஆராய்ந்து பார்த்து செயல்படுத்த வேண்டும். மக்கள் பணியாளர்களுக்கு சேவை மனப்பான்மையும், நடுநிலையுடன் செயல்படுவதும் மிகவும் முக்கியமானது. திட்டங்களை நிறைவேற்றுவதில் மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம். அரசு திட்டங்களை அமல்படுத்துவதில் கூட்டு முயற்சிகளை ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.