74-வது பிறந்தநாள்: ஜனாதிபதிக்கு, கவர்னர் தமிழிசை வாழ்த்து

74-வது பிறந்தநாளை கொண்டாடிய ஜனாதிபதிக்கு, கவர்னர் தமிழிசை வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2019-10-01 20:00 GMT
ஐதராபாத்,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று தனது 74-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு, தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருந்ததாவது:-

பெருமதிப்பிற்குரிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இந்தியாவின் அனைத்து தர மக்களின் வாழ்க்கை தரம் உயர அயராது பாடுபட்டுவரும் உங்கள் பணி, வரும் காலங்களில் இந்த தேச மக்களுக்கு தொடர வேண்டி நீண்ட ஆயுளும், மகிழ்ச்சியையும் தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்