இந்தியாவுக்குள் ஊடுருவ நினைத்தால் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பாடம் கற்பிக்கப்படும்: ராணுவம் எச்சரிக்கை

இந்தியாவுக்குள் ஊடுருவ நினைத்தால் பாகிஸ்தான் ராணுவத்துக்கு 1971 போரைவிட சிறந்த பாடம் கற்பிக்கப்படும் என்று ராணுவ கமாண்டர் எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2019-09-05 01:25 GMT
ஸ்ரீநகர், 

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள இந்திய ராணுவ கமாண்டர் கே.ஜே.எஸ்.தில்லான்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “  பாகிஸ்தான் ராணுவத்தின் எந்த மோசமான நடவடிக்கையோ, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி ஊடுருவும் முயற்சியோ இதுவரை வெற்றிபெற்றதில்லை. அப்படி ஏதாவது அவர்கள் முயற்சித்தால், அவர்களுக்கு தக்க பதிலடி திருப்பித்தரப்படும்.

அது அவர்களது அடுத்த தலைமுறையினரும் மறக்க முடியாததாக இருக்க வேண்டும். ராணுவ மந்திரியும், ராணுவ தளபதியும் தெரிவித்த தகவல் இது. இந்திய ராணுவம் சார்பில் நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது, பாகிஸ்தான் ராணுவத்துக்கு இதுவரை சந்தித்திராத வகையில், அநேகமாக 1971 போரைவிட சிறந்த பாடம் கற்பிக்கப்படும்” என்றார். 

மேலும் செய்திகள்