தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் வகையில் அணைப் பாதுகாப்பு மசோதா உள்ளது -ஆ.ராசா

தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் வகையில் அணைப் பாதுகாப்பு மசோதா உள்ளதாக மக்களவையில் திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Update: 2019-08-02 15:43 GMT
புதுடெல்லி

மத்திய அரசின் அணைப் பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து மக்களவையில் திமுக  சார்பில் ஆ.ராசா எம்பி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கூட்டாட்சிக்கு விரோதமான முறையில் அணைப் பாதுகாப்பு மசோதா  கொண்டுவரப்பட்டு உள்ளது. பல நாடுகளில் அணைப் பாதுகாப்பு மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் வகையில் அணைப் பாதுகாப்பு மசோதா உள்ளது என கூறினார்.

மேலும் செய்திகள்