உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் தமிழகத்தின் மானியத்தை குறைத்த மத்திய அரசு..!

உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத்தை மத்திய அரசு குறைத்துள்ளது.;

Update: 2019-07-23 05:36 GMT
புதுடெல்லி

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத்தை குறைத்துள்ளதாக தலைமை கணக்காயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தலைமை கணக்காயர் குழு தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017-18 ஆம் ஆண்டு 14-வது நிதிக்குழுவில் தமிழகத்துக்கு மொத்தம் 3 ஆயிரத்து 528 கோடி ரூபாய் பரிந்துரைத்து ஆயிரத்து 955 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். 

எனினும், உள்ளாட்சிக்கு 758 கோடி ரூபாயும், நகர்புற அமைப்புக்கு 815 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு முழுவதும் செலவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பது  மத்திய அரசு வழங்க வேண்டிய மானிய உதவி குறைவிற்கு காரணமாக இருப்பதாக தலைமை கணக்காய்வு மற்றும் தணிக்கை  தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்