மேற்கு வங்காளம்: திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ, பா.ஜனதாவில் இணைந்தார்

மேற்கு வங்காளத்தில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ, பா.ஜனதாவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

Update: 2019-06-17 18:17 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னும், பின்னும் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள், பா.ஜனதாவில் இணைவது தொடர்கதையாகி வருகிறது.

நோவாபாரா தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுனில் சிங், அக்கட்சியை சேர்ந்த 15 கவுன்சிலர்கள், ஒரு காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் ஆகியோர் பா.ஜனதாவில் இணைந்தனர். டெல்லியில், மேற்கு வங்காளத்துக்கான பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் கைலாஷ் விஜய்வர்கியா முன்னிலையில் அவர்கள் சேர்ந்தனர்.

திரிணாமுல் காங்கிரசில் இருந்து பா.ஜனதாவுக்கு தாவி, தற்போது பரக்பூர் தொகுதி எம்.பி.யாக உள்ள அர்ஜூன் சிங்கின் உறவினர்தான் சுனில் சிங் ஆவார்.

மேலும் செய்திகள்