திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.

Update: 2019-06-09 14:15 GMT
திருப்பதி,

மாலத்தீவு, இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி திருப்பதி வந்தார்.  ரேணிகுண்டா விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆந்திர ஆளுநர் நரசிம்மன், உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி , முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

அதனைதொடர்ந்து ரேணிகுண்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அதன் பிறகு திருப்பதியில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றதையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.  

பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உடன் இருந்தார். சாமி தரிசனம் செய்த பின்னர் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரதமர் மோடிக்கு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. 

பிரதமர் மோடியை வருகையையொட்டி திருமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மேலும் செய்திகள்