ரூ.300 கோடிக்கு “ஸ்பைஸ் ரக” வெடிகுண்டுகளை வாங்க இந்தியா-இஸ்ரேல் ஒப்பந்தம்
இஸ்ரேலிடம் இருந்து ரூ.300 கோடியில் 100-க்கும் மேற்பட்ட ஸ்பைஸ் ரக வெடிகுண்டுகளை வாங்க இந்திய விமானப்படை ஒப்பந்தம் செய்துள்ளது.
புதுடெல்லி,
ரூ.300 கோடிக்கு, 100க்கும் அதிகமான 'ஸ்பைஸ்' ரக வெடிகுண்டுகளை வாங்க, இந்தியா - இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட் தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதலில் இந்த வகையிலான வெடிகுண்டுகளை இந்திய விமானப்படை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.