மோடி பதவி ஏற்பு விழாவுக்கு வந்த இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு விருந்து - அமைச்சர்களும் பங்கேற்பு

மோடி பதவி ஏற்பு விழாவுக்கு வந்த இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில், அமைச்சர்களும் பங்கேற்றனர்.

Update: 2019-06-01 21:01 GMT
புதுடெல்லி,

நரேந்திர மோடி பிரதமராக 2-வது முறையாக கடந்த 30-ந்தேதி பதவி ஏற்றார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த இந்த விழாவில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும் பங்கேற்றார். நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவை நிறைவு செய்துவிட்டு மறுநாள் அதாவது 31-ந்தேதி இலங்கை தூதர் ஆஸ்டின் பெர்னான்டோ வீட்டுக்கு (இலங்கை இல்லம்), சிறிசேனா சென்றார். அங்கு அவருக்கு என்று பிரத்தியேகமாக மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விருந்தில் சிறிசேனா உடன் அமைச்சர்கள் ஆறுமுக தொண்டைமான், மனோ கணேசன், செந்தில் தொண்டைமான் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதையடுத்து சிறிசேனா தலைமையிலான அந்த குழுவினர் அன்றே இலங்கைக்கு புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்