16-வது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றம்

16-வது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானம் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-05-24 12:41 GMT
புதுடெல்லி,

நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 349 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதில் பாரதீய ஜனதா மட்டும் 302 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. 

இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. தற்போதைய அமைச்சரவை மற்றும் மக்களவை முடிவுக்கு வருவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமைச்சரவைக்கூட்டம் முடிந்த நிலையில் ஜனாதிபதியை பிரதமர் மோடி சந்திக்கிறார்.

மேலும் செய்திகள்